திங்கள், 7 ஏப்ரல் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 5 ஏப்ரல் 2025 (17:17 IST)

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது வழங்கப்பட்ட நிலையில், அவர் திருக்குறள் மூலம் நன்றி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இலங்கை சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான 'மித்ர விபூஷண' விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை இலங்கை பிரதமர் அனுர குமார திசநாயகா வழங்கி கௌரவித்தார்.
 
இந்த விருதை பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி, திருக்குறள் மூலம் நன்றியை தெரிவித்தார். "செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல வினைக்கரிய யாவுள காப்பு" என்னும் குறளின் மூலம் நட்பின் பெருமையை உணர்த்தினார். அதாவது, நட்புக் கொள்வது போன்ற அரிய செயல் வேறு எதுவும் இல்லை; அதுபோல் பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறொன்றும் இல்லை என்று அவர் இந்த திருக்குறளுக்கு விளக்கம் அளித்தார்.
 
இந்த பயணத்தின் போது, அவர் இலங்கை பிரதமருடன் பல ஒப்பந்தங்களில் கையெழுத்து வைக்கவும் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை, பிரதமர் மோடி இலங்கை பயணத்தை முடித்துக்கொண்டு ஹெலிகாப்டர் மூலம் தமிழகத்தின் மண்டபம் கடலோர காவல்படை தளத்திற்கு வருகிறார் என்பதும், அங்கு அவர் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran