தீபக் மிஸ்ரா ஓய்வுபெறும் வரை சுப்ரீம் கோர்ட் செல்ல மாட்டேன்: காங்கிரஸ் வழக்கறிஞர் சபதம்
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை மாநிலங்களவையில் கொண்டு வர வேண்டும் என்று காங்கிரஸ் உள்பட 7 கட்சிகளின் எம்பிக்கள் துணை ஜனாதிபதியிடம் நோட்டீஸ் கொடுத்தனர். ஆனால் இந்த கோரிக்கையை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நிராகரித்தார்.
இந்த நிலையில் தீபக் மிஸ்ரா பதவி நீக்கம் செய்யப்பட வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. எனவே தீபக் மிஸ்ரா ஓய்வு பெறும் வரை சுப்ரீம் கோர்ட் செல்ல மாட்டேன் என காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் பிரபல வழக்கறிஞருமான கபில்சிபல் கூறியுள்ளார்.
இதுகுறித்து கபில்சிபல் செய்தியாளர்களிடம் கூறியபோது, 'இனி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவி விலகும் வரை அல்லது பணி ஓய்வு பெறும்வரை உச்சநீதிமன்றம் செல்ல மாட்டேன். அவர் எத்தனை நாள் பதவியில் இருக்கிறாரோ அது வரை உச்ச நீதிமன்றம் செல்ல மாட்டேன். என்னுடைய வேலைக்கு நான் செலுத்தும் மரியாதை அதுதான் என்று கூறியுள்ளார். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பதவி ஓய்வு பெற இன்னும் ஆறு மாதங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது