வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 22 ஏப்ரல் 2018 (16:57 IST)

3 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த சென்னை கோவில் பூசாரி

சென்னையில் 3வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோவில் பூசாரி ஒருவரை பொதுமக்கள் அடித்து உதைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சென்னை சூளைமேடு பகுதியில் ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக பணிபுரிந்து வரும் உதயகுமார் என்பவர், அந்த கோவில் அருகே விளையாடி கொண்டிருந்த பெண் குழந்தையை கோவிலுக்குள் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
 
இதனால் பயந்து போன அந்த குழந்தை அழுது கொண்டே வீட்டிற்கு சென்று தனது பெற்றோரிடம் நடந்ததை கூறி அழுதது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த குழந்தையின் பெற்றோர் உடனடியாக உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து சென்று பூசாரி உதயகுமாருக்கு தர்ம அடி கொடுத்தனர். இதுகுறித்த தகவல் அறிந்தவுடன் மகளிர் காவல்துறையை சேர்ந்தவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து உதயகுமாரை கைது செய்தனர்
 
12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் தூக்கு தண்டனை என்ற சட்டம் நிறைவேற்றப்பட்ட அன்றே இந்த சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.