தம்பியின் 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய அண்ணன் கைது
தம்பியின் 3 வயது குழந்தையை, அவரது அண்ணனே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் பெண்கள் மீதான பாலியல் தொல்லைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக சிறுமிகள் பெருமளவில் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி புனிதா. இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகள் உள்ளார். ரமேஷின் அண்ணனான சுரேஷ், ரமேஷின் வீட்டினருகே குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். ரமேஷின் குழந்தை தனது பெரியப்பாவான சுரேஷின் வீட்டிற்கு அடிக்கடி செல்வது வழக்கம்.
இந்நிலையில் கடந்த மாதம் சுரேஷின் வீட்டிற்கு சென்ற குழந்தையை கயவன் சுரேஷ், தம்பியின் குழந்தை என்றும் பாராமல், குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளான். இதனைக்கண்ட சிறுமியின் தாய் புனிதா அதிர்ச்சியடைந்தார். இதனால் சுரேஷ் ஓடி தலைமறைவானான்.
இதனையடுத்து காவல் நிலையத்திற்கு சென்ற புனிதா சுரேஷ் மீது புகார் அளித்தார். புகாரின் பேரில் கயவன் சுரேஷை தேடிவந்த போலீஸார், திருப்பதியில் வைத்து நேற்று கைது செய்தனர்.