1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 22 ஏப்ரல் 2018 (11:09 IST)

ஆபாச படம் பார்த்து விட்டு பெற்ற தாய்க்கு பாலியல் வன்கொடுமை அளித்த கொடூர மகன் கைது

குஜாரத்தை சேர்ந்த அயோக்கியன் ஒருவன் ஆபாச படம் பார்த்து விட்டு பெற்ற தாய் என்றும் பாராமல் அவருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளான்.
நாட்டில் பெண்கள் மீதான் பாலியல் தொல்லைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழிக்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என அவசர சட்டம் மத்திய அனைச்சரவையில் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று இந்த அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி இன்று ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்டை சேர்ந்த ராகுல் என்பவன் ஆபாச படத்திற்கு அடிமையானவன். நேற்றிரவு பணி முடிந்து வீட்டிற்கு வந்த ராகுல், தனது செல்போனில் ஆபாச படம் பார்த்துள்ளான். இதனையடுத்து தனது தாயின் அறைக்கு சென்று, தனது தாய்க்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளான் அந்த மனித மிருகம். இதனை சற்றும் எதிர்பாராத தாய், அவனிடம் இருந்து தப்பி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அந்த கயவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.