தொடர்புடைய செய்திகள்
- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைத்த ஓபிஎஸ்
- இந்த மூவரில் ஒருவர் தான் வேட்பாளர்.. எடப்பாடி பழனிசாமி முடிவு
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் :அமமுக வேட்பாளர் அறிவிப்பு
- இரட்டை இலை: சுப்ரீம் கோர்ட்டில் ஈபிஎஸ் தரப்பு முறையீடு
- தேமுதிக வேட்பாளர் திமுகவுக்கு தாவலா? – ஈரோடு கிழக்கில் பரபரப்பு!
அதிமுக யாருடன் கூட்டணி? இன்னும் 2 நாட்களில் வரும் பதில்!
இடைத்தேர்தலில் அதிமுகவுடன் யார் யார் கூட்டணி என்பது குறித்தும் அடுத்த இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும் என தகவல்.
ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளரை முடிவு செய்ய அதிமுக ஆட்சி மன்ற குழு விரைவில் கூடி முடிவேடுக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான் கிடைக்கும் என்றும் கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியாகும் என்று முன்னர் தெரிவித்தார்.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளராக தென்னரசு, ராமலிங்கம் மற்றும் நந்தகுமார் ஆகிய மூவரில் ஒருவரை தான் களம் இறக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்த முறையான அறிவிப்பு இன்று மாலை அல்லது நாளை வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து சென்னையில் ஆட்சி மன்ற குழு கூட்டம் கூடி இடைத்தேர்தல் வேட்பாளரை முடிவு செய்யும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்துள்ளார். இடைத்தேர்தலில் அதிமுகவுடன் யார் யார் கூட்டணி என்பது குறித்தும் அடுத்த இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
