புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 11 மார்ச் 2019 (16:57 IST)

சாதி ஓட்டுகளை கவர, அதிமுக பலே வியூகம்!!

நாடாளுமன்றத் தேர்தலோடு தமிழகத்தில் உள்ள 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. 
நாடாளுமன்ற தேர்தலில் தொகுதிப் பங்கீடு செய்துள்ள கட்சிகள் சட்டமன்றத் தேர்தலிலும் தொகுதிகளை பங்கிட்டுக் கொள்ளுமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் இடைத்தேர்தலில் நிற்காமல் திமுகவுக்கே தங்கள் ஆதரவைக் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. அதனால் திமுக வேட்பாளர்களே 18 தொகுதிகளிலும் நிற்க இருக்கிறார்கள். 
 
அதுபோலவே ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அதிமுகவும் இடைத்தேர்தலில் தங்கள் கட்சி வேட்பாளர்களையே நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 
இந்நிலையில், இரு தேர்தலில் ஆளும்கட்சி மீதான அதிருப்தியை குறைக்கவும், பல்வேறு அமைப்பு, சாதியினரின் ஆதரவை பெறவும் அதிமுக புது வியூகத்தை கையில் எடுத்துள்ளது. 
 
ஆம், சாதி ஓட்டை கணக்கில் வைத்து பெரும்பிடுகு முத்தரையர், இரட்டை மலை சீனிவாசன், வி.கே.பழனிசாமி கவுண்டர் ஆகிய தலைவர்களுக்கு மணிமண்டபம் கட்டப்படும். ஒண்டிவீரன், சுந்தரலிங்கனார் ஆகிய தலைவர்களின் மணிமண்டபம் புனரமைக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். 
அது போன்று சாதி சங்கங்களையும், அமைப்புகளையும் கவர அதிமுக புதிய உத்தியை கையாண்டு வருகிறது. சாதி தலைவர்களுக்கு சிலை வைத்து ஓட்டை கைப்பற்ற திட்டம் தீட்டியுள்ளது அதிமுக.