தமிழகத்தில் எந்தெந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள்: இந்தியா டிவி கணிப்பு

Last Modified திங்கள், 11 மார்ச் 2019 (07:00 IST)
ஒவ்வொரு தேர்தலின்போதும் ஊடகங்களும், தனியார் அமைப்புகளும் வெற்றி பெறும் கூட்டணி எது? கட்சி எது? என்பது குறித்த கருத்துக்கணிப்பை வெளியிடுவது வழக்கமாகி இருந்து வரும் நிலையில் தற்போது இந்தியா டிவி மற்றும் சி.என்.எக்ஸ் ஆகியவை இணைந்து பாராளுமன்ற தேர்தலில் தமிழக கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என கணித்துள்ளது.

இந்த கருத்துக்கணிப்பின்படி தமிழக அரசியல் கட்சிகள் வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது

திமுக: 16 தொகுதிகள்
அதிமுக: 12 தொகுதிகள்
காங்கிரஸ்: 5 தொகுதிகள்
அமமுக: 2 தொகுதிகள்
பாமக: 2 தொகுதிகள்
பாஜக: 1 தொகுதி
இதர கட்சி: 1 தொகுதி (அனேகமாக கமல்ஹாசன் தொகுதியாக இருக்கலாம்)
மேலும் இந்த தேர்தலில் அகில இந்திய அளவில் பாஜக தனியாக 238 தொகுதிகளிலும் கூட்டணியுடன் இணைந்து 285 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் பாஜக ஆட்சியே ஏற்படும் என கூறப்பட்டுள்ளதுஇதில் மேலும் படிக்கவும் :