ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 7 ஜூன் 2019 (09:10 IST)

100 சதவீதத்துக்கு மேல் ஒத்துழைப்போம் – அதிமுக ஆட்சியைக் கலைக்க காங்கிரஸ் ஆதரவு !

அதிமுக ஆட்சியைக் கலைக்க திமுக அரசு ரகசியமாக செயல்பட்டு வருவதாக சொல்லப்படும் நிலையில் அதற்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என தமிழக காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த இடைத்தேர்தலில் திமுக 13 தொகுதிகளில் வெற்றி பெற்று 109 எம்.எல்.ஏக்களைக் கைவசம் வைத்துள்ளது. அதிமுக அரசைக் கலைக்க இன்னும் சில எம்.எல்.ஏக்களின் ஆதரவே திமுகவுக்கு தேவையாக உள்ளது. அதற்காக சில அதிமுக எம்.எல்.ஏ.களை தங்கள் பக்கம் இழுக்கும் வேலையில் திமுக இறங்கியுள்ளது.

இதற்காக திமுக தனது மாவட்ட செயலாளர்கள் மூலம் அதிமுக எம்.எல்.ஏக்களுடன் ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இது குறித்து திருச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் கேள்வி எழுப்பியபோது ’திமுகவுக்கு நாங்கள் 100 சதவீதம் ஒத்துழைப்பு அளிப்போம். 100 சதவீதத்துக்கு மேல் 1 சதவீதம் இருந்தால் அதற்கும் ஒத்துழைப்பு அளிப்போம். அதிமுக ஆட்சி கவிழ்வது தவிர்க்க முடியாதது. அது இப்போது நூலிழையில் ஒட்டிக்கொண்டுள்ளது. அறுந்துவிழ நாளாகாது’ எனத் தெரிவித்துள்ளார்.