எம்ஆர் விஜயபாஸ்கர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு

Sugapriya Prakash| Last Modified வியாழன், 22 ஜூலை 2021 (09:42 IST)
முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்  மீது சொத்துக்குவிப்பு வழக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 
முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தார் என்ற குற்றச்சாற்று ஏற்கனவே இருந்தது. இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இன்று காலை திடீரென அவரது வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது. 
 
இந்த வருமான வரி சோதனை காரணமாக அவரது வீட்டின் முன் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வருமான வரி சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட பொருள்கள் மற்றும் ஆவணங்கள் குறித்த தகவல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இதனைத்தொடர்ந்து அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் வருமானத்துக்கு மீறி சொத்துகளை சேர்த்ததாக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்  மீது சொத்துக்குவிப்பு வழக்கை பதிவு செய்துள்ளது லஞ்ச ஒழிப்புத்துறை.


இதில் மேலும் படிக்கவும் :