திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 3 அக்டோபர் 2023 (12:28 IST)

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு.. மீண்டும் கூட்டணியா?

கோவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்துள்ளதால் மீண்டும் பாஜக-அதிமுக கூட்டணி ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
 
பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்த நிலையில் கோவையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை சற்றுமுன் சந்தித்துள்ளனர்.
 
பொள்ளாச்சி ஜெயராமன், அமுல் கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை சந்தித்தனர் என தெரிகிறது. மேலும் இந்த சந்திப்பின்போது பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனும் சந்திப்பின்போது உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 இந்த சந்திப்பால் அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் இணைகிறதா அல்லது அதிமுகவிலிருந்து ஒரு சில எம்எல்ஏக்கள் விலகி பாஜகவில் இணைவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva