1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 2 அக்டோபர் 2023 (15:53 IST)

விசாயிகளின் வாழ்க்கையில் செழிப்பைக் கொண்டு வரும் என்பது உறுதி.-அண்ணாமலைஉ

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் என் மண் என் மக்கள் பாதயாத்திரை பயணம் மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே பாஜக தேசிய தலைவர் ஜே.பி,. நட்டா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் அண்ணாமலை சந்திப்பு நடத்தியதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், தேசிய மஞ்சள் வாரியம் அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியதற்காக, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு  மோடி அவர்களுக்கு, தமிழக மஞ்சள் விவசாயிகள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் சமூக வலைதள பக்கத்தில்,

 
‘’தேசிய மஞ்சள் வாரியம் அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியதற்காக, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு  மோடி அவர்களுக்கு, தமிழக மஞ்சள் விவசாயிகள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நமது நாடு 1.1 மில்லியன் டன் மஞ்சள் உற்பத்தி செய்கிறது. இது, உலகளாவிய மஞ்சள் உற்பத்தியில் 80% ஆகும்.  மேலும் தமிழகத்தின் மஞ்சள் நகரமான ஈரோடு, நிஜாமாபாத்திற்கு அடுத்தபடியாக, இந்தியாவின் இரண்டாவது பெரிய மஞ்சள் சந்தையாகும்.

கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம், நமது மாண்புமிகு பிரதமர் திரு  ந ரேந்திரமோடி அவர்களின் சீரிய தலைமையிலான மத்திய அரசு, நமது ஈரோடு மஞ்சளுக்கு, புவிசார் குறியீடு வழங்கிப் பெருமைப்படுத்தியது.

புதியதாக அமைக்கப்பட்டுள்ள தேசிய மஞ்சள் வாரியம், மஞ்சள் உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் ஏற்றுமதியை முறைப்படுத்தி, மஞ்சள் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் வாழ்க்கையில் செழிப்பைக் கொண்டு வரும் என்பது உறுதி’’ என்று தெரிவித்துள்ளார்.