1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ADMK MLA meeting today for select opposite leader

எதிர்கட்சி தலைவர் பதவிக்கு போட்டி! – இன்று மீண்டும் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்!

Tamilnadu
தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவராக யாரை தேர்வு செய்வது என்பதில் அதிமுகவில் குழப்பம் நீடிக்கும் நிலையில் இன்று மீண்டும் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெற்ற நிலையில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இந்நிலையில் 65 இடங்களில் வெற்றிபெற்றுள்ள அதிமுக சட்டமன்றத்தில் எதிர்கட்சியாக இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் அதிமுக சார்பில் எதிர்கட்சி தலைவராக யாரை நியமிப்பது என்பதில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது.

இதனால் முன்னதாக கூட்டப்பட்ட எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தீர்வு எட்டாத நிலையில் இன்று மீண்டும் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் யார் என முடிவு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
விக் எண்ட் முடிந்ததும் பெட்ரோல் - டீசல் விலை மீண்டும் உயர்வு !