செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 12 செப்டம்பர் 2019 (13:37 IST)

எனது பெயரால் பல சங்கடங்களை அனுபவித்தேன் – ஸ்டாலின் ஆதங்கம் !

இன்று கலந்துகொண்ட ஒரு திருமண நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் தனது பெயரால் பல சங்கடங்களை அனுபவித்ததாகக் கூறியுள்ளார்.

சமீபத்தில் தான் கலந்துகொண்ட புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் திமுக பொருளாளர் துரைமுருகன் திமுகவினரே இப்போது தமிழில் பெயர் வைப்பது இல்லை எனக் கூறியது கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினும் இன்று கலந்துகொண்ட ஒரு திருமண நிகழ்ச்சியில் இதேக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

அவரது பேச்சில் ‘இன்றைய காலகட்டம் தமிழுக்கு சோதனையான காலகட்டம். இனிமேலாவது திமுகவினர் தமிழ்ப் பெயரையே தங்கள் குழந்தைகளுக்கு வைக்க வேண்டும். அப்படியென்றால் உங்களது பெயர் தமிழ்ப் பெயரா என்று நீங்கள் கேட்கலாம். என் தந்தை கலைஞருக்கு கம்யூனிஸக் கொள்கைகள் மேல் இருந்த பற்றால் எனக்கு இந்தப் பெயரை வைத்தார். எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தமிழ்ப் பெயரை சூட்டிய அவர் எனக்கும் மட்டும் ஸ்டாலின் எனப் பெயர் வைத்தார். இந்தப் பெயரால் நான் பல சங்கடங்களை அனுபவித்துள்ளேன். ’ எனக் கூறினார்.