ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (10:45 IST)

காபி, உணவு பொட்டலங்கள் விநியோகம்! – போராட்ட களத்திலேயே தங்கிவிட்ட அதிமுக தொண்டர்கள்!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு நடந்து வரும் நிலையில் அங்கு போராட்டம் செய்து வரும் அதிமுக தொண்டர்களுக்கு உணவு பொட்டலம், டீ ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மீது கடந்த சில நாட்களாக ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட நிலையில் இன்று அதிகாலை திடீரென லஞ்ச ஒழிப்பு போலீசார் மற்றும் வருமான வரித் துறையினர் ரெய்டு செய்து வருகின்றனர்.

சென்னை, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட அவருக்க சொந்தமான 52 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்த போது பதவியை தவறாக பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் உட்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இதையடுத்து குனியமுத்தூரில் உள்ள அவரது வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், அவரது வீட்டின் முன்பாக அதிமுக தொண்டர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக தொண்டர்களுக்கு உணவு பொட்டலம், டீ வழங்கப்பட்டு வருகிறது. இதனால் தொண்டர்கள் இன்று முழுவதுமே அங்கு போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.