1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ADMK members crowd before Sp velumani house

வேலுமணியின் வீட்டின் முன்பு அதிமுக தொண்டர்கள் - போலீஸார் குவிப்பு!!

எஸ்.பி.வேலுமணி
குனியமுத்தூரில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் வீட்டின் முன்பு அதிமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். 

 
முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மீது கடந்த சில நாட்களாக ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட நிலையில் இன்று அதிகாலை திடீரென லஞ்ச ஒழிப்பு போலீசார் மற்றும் வருமான வரித் துறையினர் ரெய்டு செய்து வருகின்றனர்.
 
சென்னை, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட அவருக்க சொந்தமான 52 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்த போது பதவியை தவறாக பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் உட்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 
 
இதனிடையே, குனியமுத்தூரில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் வீட்டின் முன்பு அதிமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர் லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனையை கண்டித்து தொண்டர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர். இதனையடுத்து அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
ஒருநாளைக்கு ஒரு லட்சம் கொரோனா பாதிப்புகள்! அமெரிக்காவை உலுக்கும் நான்காவது அலை!