செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (09:01 IST)

எஸ்.பி. வேலுமணி மற்றும் 17 பேர் மீது வழக்குப்பதிவு

எஸ்.பி. வேலுமணி, அவரது சகோதரர் மற்றும் நிறுவனங்கள் 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 

 
முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மீது கடந்த சில நாட்களாக ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட நிலையில் இன்று அதிகாலை திடீரென லஞ்ச ஒழிப்பு போலீசார் மற்றும் வருமான வரித் துறையினர் ரெய்டு செய்து வருகின்றனர். சென்னை, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட அவருக்க சொந்தமான 52 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில் எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்த போது பதவியை தவறாக பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் உட்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை மாநகராட்சி ஒப்பந்தத்தில் ரூ.464 கோடி மற்றும் கோவை மாநகராட்சி ஒப்பந்தத்தில் ரூ.346 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.