புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 8 மார்ச் 2023 (11:59 IST)

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து ஆலோசனை.. என்ன செய்ய போகிறார் ஓபிஎஸ்?

ADMK
தற்போது அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்ய தேர்தல் நடத்த ஆலோசனை நடத்த அதிமுக திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து ஆலோசனை செய்ய நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறவிருக்கும் இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குவார் என்றும் தமிழ் மகன் உசேன், நத்தம் விசுவநாதன், ஜெயக்குமார், சி.வி சண்முகம் உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளராக ஒருமனதாக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்வது குறித்து ஆலோசனை செய்யப்படும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்பட்டாலும் எடப்பாடி பழனிச்சாமி எதிர்த்து யாரும் போட்டியிட மாட்டார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த ஆலோசனை நடைபெற உள்ள நிலையில் ஓபிஎஸ் தரப்பு என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
Edited by Mahendran