1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 7 மார்ச் 2023 (18:11 IST)

யார் தயவும் இன்றி தனித்து போட்டியிட்ட இயக்கம்.. பாஜகவுக்கு பதிலடி கொடுத்த அதிமுக..!

ADMK
அதிமுக யார் தயவும் இன்றி தனித்து போட்டியிட்ட இயக்கம் என பாஜகவுக்கு அதிமுக நிர்வாகி பதிலடி கொடுத்துள்ளார்.
 
பாஜகவில் இருந்து விலகி சிலர்  அதிமுகவில் சேர்ந்து உள்ள நிலையில் இது குறித்து அதிமுக ஐடி விங் செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் அவர்கள் கூறியதாவது: நோட்டாவை விட குறைவான வாக்குகள் வாங்கி வந்த நிலையில் 2021 தேர்தலில் பாஜக எப்படி எம்எல்ஏக்களை வென்றது என்பதே இதற்கான பதில். அதிமுக யார் தயவு என்று தனித்துப் போட்டியிட்டு தேர்தலில் வென்ற இயக்கம்.  அதிமுகவை வளர்க்க பாஜகவின் ஆட்கள் தேவையில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
 அதேபோல் அதிமுக வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ஜனனி சதீஷ் என்பவர் கூறியபோது ’பாஜக மாநில விளையாட்டு பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அது அண்ணாமலையை அனுமதியோடு வெளியிடப்படுகிறதா என்பதை தெரிந்து கொள்ள காத்திருக்கிறோம், அனுமதியோடு வெளியிட்டது என்றால் அதற்கு பதிலடி கொடுக்கவும் காத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva