செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 8 மார்ச் 2023 (07:27 IST)

அதிமுகவை எதிர்த்து அரசியல் செய்ய முடியாது: அண்ணாமலைக்கு கடம்பூர் ராஜூ பதில்..!

kadambur
தமிழகத்தில் அதிமுகவை எதிர்த்து அண்ணாமலையால் அரசியல் செய்ய முடியாது என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியிருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களாக அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே பெரும் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. பாஜகவில் இருந்து விலகும் பிரபலங்கள் அதிமுகவில் இணைந்து வருகின்றனர் என்பதும் இது குறித்து பாஜகவினார் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நேற்று அண்ணாமலை காரசாரமான பேட்டி அளித்த நிலையில் அதிமுகவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடும் வகையிலும் சில கருத்துக்களை தெரிவித்தார். 
 
இந்த நிலையில் இது குறித்து பதிலடி கொடுத்துள்ள முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அதிமுகவை எதிர்த்து அரசியல் செய்ய நினைப்பது அண்ணாமலைக்கு கானல் நீராகத்தான் முடியும் என்று தெரிவித்தார். மேலும் கூட்டணியை முடிவு செய்வது அண்ணாமலை கிடையாது என்றும் எந்த முடிவையும் பாஜகவை பொறுத்த வரை டெல்லி தான் எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்
 
Edited by Siva