புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By

சட்டமன்ற தேர்தலில் உதயநிதி ஸ்டாலின்… இதுவரை கடந்து வந்த பாதை!

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இந்த முறை சட்டசபை தேர்தலில் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார்.

திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதியின் பேரனும் ,தற்போதைய  தலைவர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் இந்த முறை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உள்ளார். 2012 ஆம் ஆண்டு ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர், படிப்படியாக தன் முகத்தை மக்களிடம் பதியவைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றிக்கண்டுள்ளார். திமுகவில் மிகவும் பலம் வாய்ந்த இளைஞர் அணியின் செயலாளராக ஸ்டாலினுக்கு பின் நியமிக்கப்பட்டுள்ள இவர், கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அதன் பலனாக முதல்முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இந்த ஆண்டு பெற்றுள்ளார். கலைஞர் குடும்பத்தில் இருந்து வரும் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்தவர் என்பதால் வாரிசு அரசியல்வாதி என்ற எதிர்மறை விமர்சனம் இவர் மேல் வைக்கப்பட்டு வருகிறது. அதை தாண்டியும் கணிசமான அளவுக்கு இளைஞர்களிடம் இவருக்கான ஆதரவு இருக்கிறது.