புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By

சட்டமன்ற தேர்தலில் துரைமுருகன்… இதுவரை கடந்து வந்த பாதை!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும் தற்போதைய பொதுச் செயலாளருமான துரைமுருகன் காட்பாடி தொகுதியில் 10 ஆவது முறையாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

திமுகவின் மூத்த அரசியல்வாதியாக அறியப்படும் துரைமுருகன், தற்போதைய நிலையில் அதிகமுறை சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்ட நபராக அறியப்படுகிறார். இதுவரை ராணிபேட்டை மற்றும் காட்பாடியில் 10 முறை போட்டியிட்டுள்ள அவர் இரண்டு முறை மட்டும் தோல்வி அடைந்துள்ளார்.

1971 – காட்பாடி - வெற்றி
1977, 1980 – ராணிப்பேட்டை –வெற்றி
1984 – காட்பாடி – தோல்வி
1989 – காட்பாடி – வெற்றி
1991 – காட்பாடி – தோல்வி
1996, 2001, 2006,2011, 2016 – காட்பாடி – வெற்றி