வியாழன், 11 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 6 ஜூன் 2018 (14:50 IST)

நெனச்ச உடனே கவிழ்க்குறதுக்கு அதிமுக ஒன்னும் சட்டி பானை இல்ல - ஜெயக்குமாரின் பஞ்ச்

நெனச்ச உடனே கவிழ்க்குறதுக்கு அதிமுக ஒன்னும் சட்டி பானை இல்ல - ஜெயக்குமாரின் பஞ்ச்
கவிழ்ப்பதற்கு அ.தி.மு.க அரசு சட்டிப்பானை அல்ல என டிடிவி தினகரனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.
தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது எஸ்.வி சேகர் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை எனக் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், அவரை கைது செய்வதற்காக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என அமைச்சர் கூறினார்,
நெனச்ச உடனே கவிழ்க்குறதுக்கு அதிமுக ஒன்னும் சட்டி பானை இல்ல - ஜெயக்குமாரின் பஞ்ச்
மேலும் அதிமுக மத்திய அரசின் கைக்கூலி எனவும், 18 எம்எல்ஏக்கள் வழக்கில் தீர்ப்பு வந்ததும் தமிழக அரசு கவிழும் என  டிடிவி தினகரன் கூறியதற்கு அமைச்சர் ஜெயக்குமார் திமுகவுடன் டிடிவி தினகரன் இணக்கமாக இருக்கிறார். கவிழ்ப்பதற்கு அதிமுக அரசு சட்டியோ, பானையோ அல்ல என பஞ்ச் பேசி டிடிவிக்கு பதிலளித்துள்ளார்.