1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Actres kasthuri angry on fan comment

தாயான பின்பு குத்தாட்டம் தேவையா? - ரசிகரின் கேள்விக்கு காண்டான கஸ்தூரி

Actres kasthuri
இந்த வயதில் ஐட்டம் டான்ஸ் ஆட வேண்டுமா என ரசிகர் எழுப்பிய கேள்விக்கு நடிகை கஸ்தூரி சூடான பதிலை அளித்துள்ளார்.

 
நடிகர் சிவா நடிக்கும் தமிழ்படம் 2.0 டீசர் சமீபத்தில் வெளியானது. இந்த டீசர் வீடியோவில், துப்பாக்கி, மெர்சல், விவேகம், விஐபி, ஆம்பள் உள்ளிட்ட பல படங்களை கிண்டலடித்து காட்சிகள் இடம் பெற்றுள்ளது. மேலும்,  நடிகை கஸ்தூரி ஒரு குத்தாட்டப் பாடலில் நடனம் ஆடியுள்ளார். அது தொடர்பான காட்சியும் அந்த வீடியோவில் உள்ளது. 
 
இந்நிலையில், தாயான பிறகு ஐட்டம் டான்ஸ் ஆடுவது சரியா? என ஒரு ரசிகர் கஸ்தூரியின் டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த கஸ்தூரி “இந்த மனநிலைதான் மாற வேண்டும். கவர்ச்சியாக இருக்கும் பெண் அறிவுடையவளாக இருக்க மாட்டாள். அவள் தாய்மைக்கு தகுந்தவள் அல்ல. நல்ல பெண் அல்ல என்கிற எண்ணம் இங்கு பலருக்கும் இருக்கிறது.

 
நாங்கள் ஒரு நடிகரை பார்த்து நீங்கள் ஏன் மதுபோதையில் இருப்பதுபோல நடிக்கிறீர்கள்? கவர்ச்சியான பாடல்களுக்கு ஏன் நடனமாடுகிறீர்கள்? என எப்போதாவது கேள்வி எழுப்பி இருக்கிறோமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
ஆளை விடுங்க! இமயமலைக்கு கிளம்பும் ரஜினிகாந்த்..