வியாழன், 11 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 15 அக்டோபர் 2021 (08:42 IST)

மயக்க ஊசி போட்டும் மண்ணை தூவிய டி23 புலி! – தீவிர தேடுதலில் வனத்துறை!

மயக்க ஊசி போட்டும் மண்ணை தூவிய டி23 புலி! – தீவிர தேடுதலில் வனத்துறை!
நீலகிரியில் பல நாட்களாக தேடிப்பட்ட டி23 புலி மயக்க ஊசி செலுத்தியும் தப்பி சென்றுள்ளது.

நீலகிரி மாவட்டம் மசினக்குடி பகுதியில் உள்ள சிங்காரா வனப்பகுதியில் பதுங்கியுள்ள டி23 புலி இதுவரை 4 பேரை அடித்துக் கொன்றுள்ளது. கடந்த 21 நாளாக இந்த புலியை உயிருடன் பிடிக்க வனத்துறையினர் ட்ரோன் கேமரா, கும்கி யானைகள் கொண்டும் தொடர்ந்து புலியின் நடமாட்டத்தை கவனித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று புலியின் இருப்பிடத்தை கண்டறிந்த வனத்துறையினர் மயக்க ஊசியால் புலியை சுட்டுள்ளனர். எனினும் சிக்காமல் புலி தப்பி காட்டுக்குள் பதுங்கியுள்ளது. மயக்க ஊசி தாக்கத்தால் புலியின் வேகம் குறையும் என்பதால் அதை விரைந்து கண்டறிய வனத்துறை தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.