வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 15 அக்டோபர் 2021 (09:26 IST)

கடலூரில் மாணவரை மூர்க்கமாக தாக்கிய ஆசிரியர்! – கைது செய்த போலீஸ்!

கடலூரில் பள்ளிக்கு வராத மாணவனை மூர்க்கமாக தாக்கிய ஆசிரியரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் செயல்படாமல் இருந்து வந்த நிலையில் நீண்ட மாதங்கள் கழித்து கடந்த மாதம் முதலாக பள்ளிகள் சுழற்சி முறையில் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கடலூரில் உள்ள நந்தனார் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர் பள்ளிக்கு வரவில்லை என்பதற்காக அந்த மாணவரை ஆசிரியர் மூர்க்கமாக தாக்கியுள்ளார். அதை வகுப்பறையில் இருந்த பிற மாணவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் பெரும் பரபரப்பு எழுந்தது.

இந்நிலையில் இதுகுறித்து அந்த ஆசிரியர் மீது சிறுவர்களுக்கு எதிரான குற்றம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.