1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ADMK Functionary Indrani Arrested Over Palani Land Scam Social Media Post

பழனி நில விவகாரம் தொடர்பாக சமூக வலைத்தள பதிவு.. அதிமுக பெண் நிர்வாகி கைது...!

பழனி நில மோசடி
பழனி நில விவகாரம் தொடர்பாக அண்மைக்காலமாகப் பல்வேறு பரபரப்பான செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இது குறித்து காவல்துறை தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்தச் சூழ்நிலையில், பழனி நில மோசடி விவகாரம் தொடர்பாகச் சமூக வலைதளங்களில் பதிவு ஒன்றை வெளியிட்டதற்காக, அ.தி.மு.க நிர்வாகி இந்திராணி என்பவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்திராணியின் இந்த விவாதத்திற்குரிய கைது நடவடிக்கைக்கு அ.தி.மு.க தலைமை தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. "மாற்றம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்துவிட்டு, தற்போது ஜனநாயக ரீதியாக எழும் விமர்சனக் குரல்களை ஒடுக்கும் வேலையில் இந்த அரசு ஈடுபட்டுள்ளது" என்று அ.தி.மு.க விமர்சித்துள்ளது. மேலும், எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்கப் பார்க்கும் இந்த அரசை 'பொய்க்கால் குதிரை அரசு' என்று சாடியுள்ள அ.தி.மு.க, இது போன்ற பொய்யான வழக்குகள் மற்றும் பழிவாங்கும் கைதுகளுக்கு அஞ்சும் இயக்கம் அ.தி.மு.க கிடையாது என்றும் ஆவேசமாகத் தெரிவித்துள்ளது.
 
சமூக வலைதளப் பதிவுக்காக அ.தி.மு.க பெண் நிர்வாகி கைது செய்யப்பட்ட விவகாரம், தற்போதைய அரசுக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையேயான அரசியல் மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த அதிரடி கைதால் தமிழக அரசியல் களத்தில் தற்போதைய சூழல் மிகவும் பரபரப்பாகக் காணப்படுகிறது.
 
Edited by Siva