தொடர்புடைய செய்திகள்
- வாக்கு பெட்டி வைக்கப்பட்டுள்ள மையங்களை 24 மணி நேரமும் கண்காணியுங்கள்.! அதிமுகவினருக்கு எடப்பாடி உத்தரவு..!!
- பண உதவி செய்தவர்களுக்கு ஜூன் 4க்கு பின் சிக்கலா? மிரட்டப்படும் தொழிலதிபர்கள்?
- பலாப்பழத்தை தேடி ஈக்கள் தான் வரும், ஒரு அதிமுக தொண்டன் கூட வரமாட்டான்: செல்லூர் ராஜூ
- எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் லைட் எரிகிறதா? திமுக, அதிமுக திடீர் போராட்டம்..!
- அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்த பின் அண்ணாமலை பேட்டி
தேர்தல் முடிவுக்கு பின் அதிமுகவை குறி வைக்கிறதா பாஜக? வழக்குகள் விரைவுப்படுத்த வாய்ப்பா?
தேர்தல் முடிவுக்கு பின்னர் அதிமுக பிரமுகர்களின் மீது உள்ள வழக்குகள் விரைவுப்படுத்தப்படும் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரயறுப்பதை அடுத்து அதற்குள் அதிமுகவை ஒரு வழி செய்து விட வேண்டும் என்று பாஜக மேலிடம் முடிவு செய்திருப்பதாகவும் அதிமுக தலைவர்கள் மீது உள்ள வழக்குகளை விரைவுப்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக கொடநாடு கொலை வழக்கு விரைவுபடுத்தப்படும் என்றும் அந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உள்ள குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் உறுதியானால் அதிமுகவை நிலை குலைய செய்யலாம் என்ற எண்ணமும் பாஜக மேல் இடத்திற்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது இருக்கும் வழக்குகளையும் துரிதப்படுத்தி சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அதிமுகவின் வேகத்தை கட்டுப்படுத்த முடியும் என்று பாஜக மேல் இடத்திற்கு சிலர் அட்வைஸ் கொடுத்திருப்பதாகவும் அதன்படி பல பழைய வழக்குகள் தூசி தட்ட தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
Edited by Mahendran
