ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Siva
Last Modified: வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (15:35 IST)

பலாப்பழத்தை தேடி ஈக்கள் தான் வரும், ஒரு அதிமுக தொண்டன் கூட வரமாட்டான்: செல்லூர் ராஜூ

பலாப்பழத்தை தேடி ஈக்கள் தான் வரும் என்றும் ஒரு அதிமுக தொண்டன் கூட வரமாட்டான் என்றும் இன்று வாக்களித்த பின்னர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி அளித்தார்.

தேர்தலுக்குப் பிறகு அதிமுக தன்னுடைய வசமாகிவிடும் என்று ஓபிஎஸ் பேட்டி அளித்த நிலையில் இதற்கு பதிலடி கொடுத்த செல்லூர் ராஜு பலாப்பழத்தை தேடி ஈக்கள் தான் வரும் என்றும் ஒரு அதிமுக தொண்டன் கூட வரமாட்டார் என்றும் தெரிவித்தார்.

மேலும் பாரதிய ஜனதா 400 சீட்டுகளை வெல்லுமா என்பது ஆண்டவனுக்கு தான் வெளிச்சம் என்றும் தமிழக மக்கள் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாளித்துள்ளார்கள் என்றும் தமிழர்களின் உரிமையை மீட்பது தான் அதிமுகவின் கொள்கை என்றும் தெரிவித்தார்

 இந்தியா கூட்டணி மட்டுமல்ல பாஜக கூட பிரதமர் வேட்பாளர் யார் என்று கூறவில்லை என்றும் பாஜகவுக்கு மேலே ஒரு தலைமை உள்ளது, அந்த தலைமை மோடியை பிரதமர் என்று கூறவில்லை என்றும், தேர்தலுக்கு பின்னரே யார் பிரதமர் என்று தெரியவரும் என்றும்  கேள்விக்கு பதில் அளித்தார்

மக்கள் தான் எஜமானர்கள், மக்கள் யாரை முடிவு செய்கிறார்களோ அவர்கள்தான் பிரதமராக வரமுடியும்,  தமிழ்நாட்டுக்கு நன்மை செய்பவர்களை பிரதமராக மக்கள் தேர்ந்து எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று அவர் கூறினார்

Edited by Siva