திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 2 மார்ச் 2021 (11:31 IST)

அதிமுகவில் ஒரே நாளில் வேட்பாளர் நேர்காணல்! – அவசரத்தில் அதிமுக!

அதிமுகவில் விருப்பமனுக்கள் அளிக்க கடைசி நாள் நாளையுடன் முடிவடையும் நிலையில் ஒரே நாளில் நேர்க்காணல் நடைபெற உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. முன்னதாக மார்ச் 5 வரை விருப்ப மனு தாக்கல் செய்ய இறுதி தேதி அறிவித்திருந்த அதிமுக தற்போது இறுதி தேதியை மார்ச் 3 ஆக குறைத்துள்ளது. இந்நிலையில் மார்ச் 4ம் தேதியே விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்க்காணல் நடைபெற உள்ளது.

வழக்கமாக அதிமுகவிலும் மற்ற கட்சிகளை போல மாவட்ட வாரியாக சில நாட்களுக்கு நேர்க்காணல் நடைபெறும். ஆனால் இந்த முறை முதல் தடவையாக ஒரேநாளில் நேர்காணலை நடத்தி முடிக்க அதிமுக முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.