1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ADMK and BJP speaks about seats share today

மீண்டும் இன்று அதிமுக - பாஜக இடையே பேச்சுவார்த்தை: உடன்பாடு எட்டப்படுமா?

அதிமுக
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்த ஒருமித்த கருத்து இன்னும் ஏற்படவில்லை என்பதால் இன்று மீண்டும் இரு கட்சி பிரமுகர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் 
 
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக 30 தொகுதிகள் வரை கேட்பதாகவும் ஆனால் அதிமுக தரப்பில் இருந்து 20 தொகுதிகளுக்கு மேல் தர முடியாது என்று கூறப்படுவது தெரிகிறது 
 
டெல்லியிலிருந்து அமித்ஷாவே நேரடியாக வந்து பேசியும் ஓபிஎஸ் இபிஎஸ் ஆகிய இருவரும் பாஜக கேட்கும் தொகுதிகளை தர மறுப்பது ஆச்சரியத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று மீண்டும் அதிமுக மற்றும் பாஜக பிரமுகர்கள் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர். இன்றைய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படுமா? பாஜக எதிர்பார்க்கும் தொகுதிகளை அதிமுக கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
About Writer
siva