1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 2 மார்ச் 2021 (08:21 IST)

ஆட்டத்தை ஆரம்பித்த சுதீஷ்: என்னவாகும் எஞ்சி இருக்கும் தேமுதிக கோட்டை?

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தொகுதிப் பங்கீடு குறித்து தனது கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது அதிமுக. ஆனால், தேமுதிகவிற்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் தேமுதிகவினர் அதிருப்தியிலும் உள்ளனர். 
 
அதோடு, தேமுதிகவுக்கு 12 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கும் எண்ணத்தில் இருக்கிறதாம் அதிமுக. ஆனால் அதனை தேமுதிக ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தனது சமுகவலைதள பக்கத்தில், நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு என்று பதிவிட்டுள்ளார். இதனால், அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
கட்ந்த இடைத்தேர்தல் சமயத்தில் திமுக -அதிமுக ஆகிய இரு கட்சிகளிடமும் ஒரே சமயத்தில் கூட்டணி குறித்து பேசி தேமுதிகவிற்கு சுதீஷ் கலங்கத்தை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.