தொடர்புடைய செய்திகள்
- அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை.. இன்றைய கூட்டத்தில் தீர்மானமா?
- கூட்டணி இல்லை என்று எடப்பாடி சொல்லட்டும் பார்க்கலாம்: நயினார் நாகேந்திரன்
- கண்டிப்பா பாஜகவுடன் கூட்டணி இல்ல; நாளை கூட்டத்தில் முக்கிய முடிவு! – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!
- அண்ணாமலையை மாற்ற முடியாது.. அதிமுகவிடம் உறுதியாக தெரிவித்த பாஜக தலைமை..!
- இந்தியாவில் பேட்டரி தொழிற்சாலை - எலான் மஸ்கின் திட்டம்
பாஜக கூட்டணி வேண்டும்? வேண்டாம்? – அதிமுக கூட்டத்தில் குழப்பம்!
பாஜகவுடன் கூட்டணியில் நீடிப்பதா வேண்டாமா என்பது குறித்த அதிமுகவின் ஆலோசனை கூட்டத்தில் குழப்பம் நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதிமுக – பாஜக கூட்டணி இடையே தொடர்ந்து விரிசல் ஏற்பட்டு வருகிறது. பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையின் சமீப கால பேச்சுகள் அதிமுக பிரமுகர்களை கோபத்திற்கு உள்ளாக்கிய நிலையில் அண்ணாமலையை பாஜக தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என பாஜக தலைமைக்கு அதிமுக அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு பாஜக தலைமை செவிசாய்க்கவில்லையாம்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட வாரியாக அதிமுகவின் பலம் மற்றும் பாஜக கூட்டணியிலிருந்து விலகுதல் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதற்கு பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தலைமையில் குழு ஒன்று கூடி பாஜக கூட்டணி குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.
இந்த விவாதத்தில் பாஜகவுடன் ஆன கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டும் என பலரும், பாஜக கூட்டணி தொடர வேண்டும் என சிலரும் கருத்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கி உள்ளார்களாம். இதனால் கூட்டணியை தொடர்வதா முறிப்பதா என்பது குறித்த குழப்பத்தில் உள்ளதாம் கட்சி தலைமை.
Edit by Prasanth.K
அடுத்த கட்டுரையில்
