புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : புதன், 16 பிப்ரவரி 2022 (11:42 IST)

தேர்தலுக்கு 2 நாள் இருக்கும்போது திமுகவில் சேர்ந்த அதிமுக வேட்பாளர்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் திடீரென திமுகவில் இணைந்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பிப்ரவரி 19 ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் இதற்கான ஆயத்த பணிகள் அனைத்தையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் திண்டுக்கல் மாநகராட்சி 1-வது வார்டு அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட முத்துப்பாண்டி என்பவர் இன்று அமைச்சரவை பெரியசாமி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவருடன் அவருடைய ஆதரவாளர்களும் இணைந்தனர்
 
தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அதிமுக வேட்பாளர் திமுகவில் இணைந்தது அதிமுக தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.