வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (17:33 IST)

ஒரு கிலோ நெய், இரண்டு சிலிண்டர் இலவசம்: வாக்குறுதி கொடுத்த முதல்வர் வேட்பாளர்!

உத்தரபிரதேச மாநிலத்தில் முதல் கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட தேர்தலுக்காக அரசியல் கட்சியினர் தீவிரமாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் நிலையில் சமாஜ்வாடி ஜனதா கட்சியின் முதல்வர் வேட்பாளர் அகிலேஷ் யாதவ் பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இன்று உத்தரபிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த சமாஜ்வாடி ஜனதா கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஏழை மக்களுக்கு இலவச ரேசன் பொருட்களை வழங்குவோம் என்றும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு கிலோ நெய் இலவசமாக வழங்குவோம் என்றும் தெரிவித்துள்ளார்
 
மேலும் ஆண்டுக்கு இரண்டு எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் கடுகு எண்ணெயும் இலவசமாக வழங்கப்படும் என்றும் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.  அகிலேஷ் யாதவ் வழங்கியுள்ள இந்த இலவச அறிவிப்புகள் வாக்காளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.