செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 16 பிப்ரவரி 2022 (08:48 IST)

திமுக நிர்வாகிகள் கட்சியிலிருந்து திடீர் நீக்கம்! – துரைமுருகன் அதிரடி!

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிட்ட திமுகவினர் உள்பட 19 பேரை திமுக கட்சியிலிருந்து நீக்கியுள்ளது.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியான நிலையில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது.

அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளில் பலர் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு அளித்திருந்த நிலையில் சிலர் தேர்ந்தெடுக்கப்படாததால் பல பகுதிகளில் சுயேட்சையாகவும் சொந்த கட்சி வேட்பாளரை எதிர்த்து போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் கட்சியில் இருந்து கொண்டே சொந்த கட்சி வேட்பாளருக்கு எதிராக போட்டியிடுபவர், கட்சி வேட்பாளர் மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் உள்ளிட்ட 19 பேரை திமுகவிலிருந்து நீக்குவதாக திமுக பொது செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.