1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Koyembedu market leave

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கோயம்பேடு காய்கறி சந்தைக்கு விடுமுறை!

கோயம்பேடு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அன்று கோயம்பேடு காய்கறி சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. 

 
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் தினத்தன்று வாக்குப்பதிவு காலை 7 முதல் மாலை 5 மணி வரையிலும், கொரோனா பாதித்தவர்களுக்கு மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர். 
 
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் வரும் 19 ஆம் தேதி பொது விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இதனை தொடர்ந்து வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அன்று கோயம்பேடு காய்கறி சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி கோயம்பேடு காய்கறி அனைத்து சங்க கூட்டமைப்பு இதனை அறிவித்துள்ளது. 
About Writer
Sugapriya Prakash