1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. admk came to first place in madhuranthagam

தாராபுரத்தில் அதிமுக வேட்பாளர் முன்னிலை!.. 2ம் இடத்திற்கு போன தவெக!...

suganya
கடந்த 6ம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இரண்டு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெற்றது. எனவே, தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அந்த 2 தொகுதிகளிலும் தீவிர பிரச்சாரம் செய்தன. இன்று காலை 8 மணிக்கு அந்த 2 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் அதில் 2 தொகுதிகளிலும் தவெக முன்னிலையில் இருந்தது.

அதன்பின் முதல் சுற்று வாக்குப்பதிவு தொடங்கிய போதும் 2 தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்களே முன்னிலையில் இருந்தனர். ஆனால், 2வது சுற்று முடிவில் தாராபுரத்தில் அதிமுக வேட்பாளர் பானுமதி முன்னிலைக்கு வந்தார். தற்போது 3 சுற்றுகள் முடிந்த நிலையில் அவர் 9,308 வாக்குகளை பெற்று முன்னிலையில் இருக்கிறார். தவெக வேட்பாளர் சத்யபாமா 8,977, வாக்குகளும், திமுக வேட்பாளர் சுகன்யா 7098 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 15,509, ஓட்டுகளும், திமுக வேட்பாளர் பரந்தாமன் 11,187 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் 9651 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை.. 2வது இடத்தை பிடிக்க அதிமுக, திமுக போட்டோ போட்டி..