தொடர்புடைய செய்திகள்
- சூதாட்ட நிறுவனத்திடம் திமுக ரூ.509 கோடி பெற்றுள்ளது ஏன்? எடப்பாடி பழனிசாமி
- அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டும் பெற்றோர்!
- பயத்தின் பிடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின்..! துணிவில்லாத திமுக - காங்கிரஸ் கூட்டணி..! எல்.முருகன் சாடல்...
- நோட்டாவுக்குப் பதிலாக இப்படி வாக்களியுங்கள்-விஜய் ஆண்டனி
- இந்திய நிலப்பரப்பை சீனாவுக்கு தாரைவார்த்து கொண்டிருக்கும் மோடி- அமைச்சர் மனோ தங்கராஜ்
திமுகவால் எப்படி ரேஷன் கடையை திறக்க முடியும்? அதிமுக பிரபலம் கேள்வி..!
புதுச்சேரியில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றால் ரேஷன் கடைகள் திறக்கப்படும் என உதயநிதி சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறிய நிலையில் அதிமுக புதுவை மாநில செயலாளர் அன்பழகன் என்பவர் புதுவையில் என்ன திமுக ஆட்சியா நடக்கிறது? ரேஷன் கடைகளை திமுகவால் எப்படி திறக்க முடியும் என்ற கேள்வி எழுப்பி உள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் புதுவையில் தேர்தல் பிரச்சாரம் செய்த போது பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தார் என்பதும் அவற்றில் ஒன்று திமுக வேட்பாளர் புதுவையில் ஜெயித்தால் ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அதற்கு பதிலடி கொடுத்துள்ள அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் புதுவையில் என்ன திமுக ஆட்சியா நடக்கிறது? திமுக எம்பி வெற்றி பெற்றால் எப்படி திமுகவால் புதுவையில் ரேஷன் கடைகளை திறக்க முடியும்? இது போன்ற போலியான வாக்குறுதிகளை கொடுப்பதுதான் திமுக என்று கூறினார்
கடந்த திமுக - காங்கிரஸ் ஆட்சியில் தான் புதுவையில் ரேஷன் கடைகள் மூடப்பட்டது என்பது உதயநிதிக்கு தெரியுமா என்ற கேள்வி எழுப்பி 15 ஆண்டுகளுக்கு மேலாக மத்தியில் ஆட்சியில் இருந்த திமுக புதுச்சேரி புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்று தரவில்லை என்றும் மத்திய நிதி குழுவில் ஏன் இணைக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
