செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 21 பிப்ரவரி 2022 (11:46 IST)

வாக்கு பெட்டியை மாத்திடாங்க... அதிமுகவினர், பாஜவினர் வாக்கு வாதம்!

திருமங்கலத்தில் வாக்கு பெட்டியை கொண்டு சென்று மாற்றி வீட்டீர்களா என அதிமுகவினர், பாஜவினர் தேர்தல் அதிகாரிகளிடம் கடும் வாக்கு வாதம். 

 
நாளை தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதும் ஏற்கனவே வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்புடன் தற்போது வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திமுக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மேலும் இந்த தேர்தலில் பாஜக தனித்து போட்டி போடுவதால் அந்த கட்சியின் பலம் என்ன என்பது இந்த தேர்தலின் முடிவுகள் தெரியும். 
 
இந்நிலையில், திருமங்கலத்தில் வாக்கு பெட்டியை கொண்டு சென்று மாற்றி வீட்டீர்களா என அதிமுகவினர் , பாஜவினர் தேர்தல் அதிகாரிகளிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த திருமங்கலம் போலீசார் விரைந்து வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.