1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 20 பிப்ரவரி 2022 (13:29 IST)

பஞ்சாபில் விவசாயிகள் ஓட்டுக்கள் பாஜகவுக்கா? அதிர்ச்சி கருத்துக்கணிப்பு

பஞ்சாபில் சமீபத்தில் மிகப்பெரிய அளவில் விவசாயிகள் போராட்டம் நடந்ததால் பாஜகவுக்கு விவசாயிகள் ஒருவர் கூட ஓட்டு போட மாட்டார்கள் என பெரும்பாலான ஊடகங்கள் கணிப்புகள் செய்துள்ளன.
 
 ஆனால் இது குறித்து நடுநிலை வாக்காளர்கள் கூறியபோது, ‘பஞ்சாப் மாநிலத்தில் அனைத்து கட்சிக்காரர்களும் விவசாயிகளுக்காக கட்சி பேதமின்றி போராடினார்கள் என்றும் அந்த போராட்டம் முடிவடைந்த பின்னர் அவரவர் கட்சிகளுக்கு வேலை பார்த்தார்கள் என்றும் எனவே பாஜகவுக்கு வழக்கமாக வாக்களிக்கும் விவசாயிகள் கண்டிப்பாக பாஜகவுக்கு தான் வாக்களிப்பார்கள் என்றும் அவர் கூறினார் 
 
விவசாயிகள் போராட்டம் காரணமாக எந்த ஒரு கட்சிக்கும் சாதகமாகவும் பாதகமாகவும் இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு சில கருத்துக்களும் இதையே தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது