வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Updated : சனி, 2 மார்ச் 2019 (10:32 IST)

அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தால் மகிழ்ச்சி: அன்புமணி

தருமபுரி: அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தால் மகிழ்ச்சி என்றும், எந்த கட்சி  வேண்டுமென்றாலும் அதிமுக கூட்டணிக்கு  வரலாம் என்றும்  அன்புமணி ராமதாஸ் கூறினார்.


 
தருமபுரி மாவட்டம்  நல்லம்பள்ளி பேருந்து நிலையத்தில் ரூ.30 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை தருமபுரி எம்பியும், பாமக இளைஞரணித் தலைவருமான அன்புமணி ராமதாஸ் திறந்து  வைத்தார்.   
 
தர்மபுரி  இணைப்பு ரயில் திட்ட விழா
 
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், தர்மபுரி மாவட்ட மக்களின் 78 ஆண்டு கால கோரிக்கையான தர்மபுரி மொரப்பூர் இணைப்பு ரயில் திட்டப் பணிகள் தொடக்க விழா வரும் திங்கட்கிழமை நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழாவில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொள்கிறார் . 
 
ஒகேனக்கல் நீர்பாசனம்
 
தர்மபுரி மாவட்ட மக்களின் விவசாய தேவைக்கு ஒகேனக்கல் பகுதியிலிருந்து நீர்ப்பாசன திட்டத்தை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதற்காக பெறப்பட்ட 10 லட்சம் கையெழுத்து உடன் வரும் செவ்வாய்க்கிழமை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க உள்ளேன்.
 
 8 வழி சாலை விவகாரம்
 
 8 வழி சாலை விவகாரத்தில் பாமகவின் நிலைப்பாடு அதே தொடர்கிறது. 8 வழி சாலையை பாமக தொடர்ந்து எதிர்த்து வருகிறது.  எங்கள் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.
 
தேமுதிக இணைந்தால் மகிழ்ச்சி
 
அதிமுக கூட்டணியில் எந்த கட்சி வேண்டுமென்றாலும் இணையலாம். தேமுதிக இணைந்தால் மகிழ்ச்சி இவ்வாறு அன்புமணி தெரிவித்தார்.