1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 25 பிப்ரவரி 2019 (19:43 IST)

சும்மா குதர்கமா கேள்வி கேட்டுட்டு... கூட்டணி வேறு, கொள்கை வேறு: டென்ஷனான எடப்பாடியார்

தேர்தலை முன்னிட்டு அதிமுக - பாஜக - பாமக கூட்டணி அமைத்திருப்பது கடும் விமர்சங்களுக்கு உள்ளாகியுள்ளது. இன்று காலை அன்புமணி ராமதாஸ் கூட்டணி குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறியது தெரிந்த ஒன்றே. 
இந்நிலையில், இந்த கூட்டணி குறித்து எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார். சேலத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கோண்ட அவர், அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியது பின்வருமாறு, 
 
அதிமுக - பாமக கூட்டணி குறித்து பல விமர்சனக்கல் கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. தேமுதிக உட்பட பல்வேறு கட்சிகளுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
பாமகவுடன் நாங்கள் மட்டுமா கூட்டணி வைத்திருக்கிறோம். கடந்த காலங்களில் திமுகவே அவர்களுடன் கூட்டணி வைத்திருந்துள்ளது. தேர்தல் நேரங்களில் கட்சி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில்தான் கூட்டணி அமைக்கப்படுகிறது. அதற்கும் கொள்கைக்கும், எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்தார். 
 
ஆனால், இதன் பின்னரும் பாமகவுடன் கூட்டணி வைத்துள்ளது நெருடலாக இல்லையா என்று கேள்வி கேட்டதும் சற்று டென்ஷனாக, சும்மா குதர்க்கமாகவே கேள்வி கேட்கக் கூடாது என சொல்லிவிட்டு நழுவினார்.