தம்பி நீ அவ்ளோ வொர்த் இல்ல!.. உதயநிதியை பங்கம் பண்ணிய ஆதவ் அர்ஜுனா..
சில நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் விஜயை மிகவும் தரக்குறைவாக விமர்சித்தார். ஒரு நடிகையுடன் அவரை தொடர்புபடுத்தி அவர் பேசியது தவெகவினரிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து உதயநிதி மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் உதயநிதி மீது வழக்கு பதிவு செய்த தஞ்சாவூர் காவல்துறை அதிகாரிகள் சென்னையில் உள்ள உதயநிதியின் வீட்டுக்கு சென்று அவரை கைது செய்து போலீஸ் வேனில் காஞ்சிபுரம் அழைத்துச் சென்றனர். இரவு காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் கையெழுத்து வாங்கிவிட்டு 10 நிமிடத்தில் வெளியே அனுப்பி விட்டார்கள்..
இந்நிலையில் மதுராந்தகம் தொகுதியில் நடந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ‘திமுக காரர்கள் தொடர்ந்து பெண்களை மிகவும் இழிவாக பேசி வருகிறார்கள். கேட்டால் ‘நாங்கள் பல வருடங்களாக அப்படித்தான் பேசி வருகிறோம்’ என்றும் கூறுகிறார்கள். இதற்கு முன்பு நீங்கள் எப்படி வேண்டுமானாலும் பேசியிருக்கலாம்.. ஆனால் தற்போது நடப்பது அண்ணன் விஜயின் ஆட்சி.. பெண்களைப் பற்றி அவதூறாக யார் பேசினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்..
எதிர்க்கட்சி தலைவரையும் அப்படித்தான் போலீசார் கைது செய்தனர்.. பத்து மணி நேரம் வேனில் கூட்டி சென்று காவல் நிலையத்தில் 10 நிமிடத்தில் வைத்து கைது செய்வதற்கெல்லாம் நீ வொர்த் இல்லை எனக் கூறி அவரை வெளியே அனுப்பி விட்டோம்.. அந்த 10 மணி நேரம் உதயநிதி கைதானது வட மாநில ஊடகங்களிலும் விவாதிக்கப்பட்டது. அவர் பெண்களை அவதூறாக பேசினார் என்பது இந்தியா முழுவதும் பரவியது.. அதற்காகத்தான் நாங்கள் அப்படி செய்தோம்.. எல்லோரும் திமுகவை பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும்’ என்று அவர் கூறியிருக்கிறார்.