அதிமுக துணை பொதுச்செயலாளர் பதவி கேட்ட ஆதவ் அர்ஜுனா!.. பழனிச்சாமி தகவல்..
2026 சட்டமன்ற தேர்தலில் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது. அதேநேரம், ஆட்சியமைக்க மேலும், 10 எம்.ஏல்.ஏக்களின் ஆதரவு தேவைப்பட்டதால் திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவை தவெக கோரியது. அந்த கட்சிகளும் ஆதரவை கொடுத்ததால் தவெக ஆட்சி அமைத்திருக்கிறது.
அதேபோல், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிருப்தியடைந்த சிவி சண்முகம் தலைமையிலான 25 எம்.எல்.ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு கொடுத்தனர். இது பழனிச்சாமிக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அதேபோல், அதில் 7 எம்.எல்.ஏக்கள் தங்களின் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துவிட்டனர். அதில் 2 பேருக்கு தற்போது மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதனால், தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டிருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி கூறி வருகிறார். இந்நிலையில், ஒரு கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி ‘ஆதவ் அர்ஜுனா என்னை சந்தித்து அதிமுகவில் துணைப்பொதுச்செயலாளர் பதவி வேண்டும் என கேட்டார். அதன்பின் தவெகவுக்கு சென்று அந்த கட்சியை குத்தகைக்கு எடுத்துவிட்டார்’ என கூறியிருக்கிறார்.