செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 23 மார்ச் 2021 (19:22 IST)

டீ போட்டுக் கொடுத்து வாக்குகள் சேகரித்த நடிகை குஷ்பு

சென்னை ஆயிரம் தொகுதியிலுள்ள ஒருவரின் வீட்டின் சமையலறைக்குச் சென்று டீ போட்டுக்கொடுத்து வாக்கு சேகரித்தார் நடிகை குஷ்பு.

தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிலையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக நேற்று தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

இந்நிலையில் சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிடும் நடிகை குஷ்பு ஒரு வீட்டிற்குச் சென்று அனைவருக்கும்  டீ போட்டுக்கொடுத்தார். இதுகுறித்த புகைப்படம் வைரலாகிவருகிறது.

பாஜக சார்பில் ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிடும் நடிகை குஷ்பு தினமும் அத்தொகுதியிலுள்ள ஒவ்வொரு பகுதிக்கும் சென்று வாக்குகள் சேகரித்து வருகிறார்.

நேற்று அவர் தனது கணவர் சுந்தர்.சி உடன் வந்து வாக்குகள் சேகரித்தார். இந்நிலையில் இன்ரு குலாம் அபாஸ் அலிகான் பகுதியில் தீவிர வாக்குகள் சேகரித்தார். அப்போது முஸ்தபா –சலீன் ரீட்டா தம்பதியரின் வீட்டிற்குச் சென்று நடிகை குஷ்பு டீ போட்டு அனைவருக்கும் கொடுத்தார்.