1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 23 மார்ச் 2021 (15:46 IST)

ஏ.ஆர்.ரஹ்மானின் ’99 songs ’பட டிரைலர் ரிலீஸ்….இணையதளத்தில் வைரல்

ஏ ஆர் ரஹ்மான் கதை, திரைக்கதை எழுதி இசையமைத்துள்ள திரைப்படம் 99 சாங்ஸ் படத்தின் டிரைலர் தற்போது ரிலீசாகியுள்ளது.

ஏ ஆர் ரஹ்மான் கதை, திரைக்கதை எழுதி இசையமைத்துள்ள திரைப்படம் 99 சாங்ஸ். விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோவுடன் இணைந்து தயாரித்துள்ளார் ரஹ்மான்.

ஏஹான் பட் மற்றும், எடில்சி வர்கஸ் ஆகியோர் இந்த படத்தில் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர்.

மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் அடுத்த அப்டேட் வேண்டிய ரசிகர்கள் காத்திருந்தனர்.

இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் 99 சாங்ஸ் படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையதளத்தில் வைரலாகிவருகிறது.