1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Actres ramya suffered food poision

நடிகை ரம்யா உணவில் விஷம்? - மருத்துவமனையில் அனுமதி

Actres ramya
நடிகையும், காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யுமான ரம்யா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


 

 
குத்து ரம்யா என அழைக்கப்பட்ட இவர், சினிமாவிலிருந்து விலகி அரசியலில் நுழைந்து காங்கிரஸ் எம்.பி. ஆனார். அதன்பின், கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
 
இந்நிலையில், தீடீரெனெ ஏற்பட்ட உடல்நலக் குறைபாடு காரணமாக, அவர் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று இரவு அவர் உணவு, விஷமாக மாறியிருப்பதாக அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். 
 
அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் நல்ல ஓய்வு எடுக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவரை சந்திக்க அரசியல் கட்சியினர் மற்றும் ரசிகர்கள் மருத்துவமனையின் முன்பு குவிதால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுள்ளது. 
About Writer
Murugan
அடுத்த கட்டுரையில்
கனிமொழியை கைது செய்த போலீஸார்