1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 9 டிசம்பர் 2017 (22:11 IST)

தமிழ் ராக்கர்ஸில் படம் வெளியாகும் தேதியை அறிவித்த படக்குழு

தமிழ் ராக்கர்ஸில் தங்கள் படம் எப்போது வெளியாகும் என தேதியை வெளிப்படையாக அறிவித்துள்ளது ‘தமிழ்ப்படம் 2’ படக்குழு.
 
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் ‘மிர்ச்சி’ சிவா நடித்த படம் ‘தமிழ்படம்’. இந்தப் படத்தில் திஷா பாண்டே ஹீரோயினாக நடித்தார். எம்.எஸ்.பாஸ்கர், ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி, மனோபாலா, டெல்லி கணேஷ், பரவை முனியம்மா ஆகியோர் நடித்திருந்தனர். எல்லா நடிகர்களையும் கிண்டல் செய்து காமெடியாக எடுக்கப்பட்ட இந்தப் படம், சூப்பர் ஹிட்டானது. 
 
அதன்பிறகு ‘இரண்டாவது படம்’ என்ற படத்தை இயக்கினார் சி.எஸ்.அமுதன். ஆனால், அந்தப் படம் ரிலீஸாகவே இல்லை. இந்நிலையில், தமிழ்படத்தின் இரண்டாம் பாகத்தைத் தொடங்குகிறார். ‘மிர்ச்சி’ சிவா ஹீரோவாக நடிக்க, ஐஸ்வர்யா மேனன் ஹீரோயினாக நடிக்கிறார். ‘விக்ரம் வேதா’ படத்தைத் தயாரித்த சஷிகாந்த் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
 
இந்தப் படத்தின் சார்பில் ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் படத்தின் ரிலீஸ் தேதி 25-5-2018 என்றும், தமிழ் ராக்கர்ஸ் ரிலீஸ் தேதி 26-5-2018 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் ராக்கர்ஸ் ரிலீஸ் பற்றி இப்படி வெளிப்படையாக அறிவித்ததற்கு நகைச்சுவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.