1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 2 ஜூன் 2018 (13:08 IST)

ஆளை விடுங்க! இமயமலைக்கு கிளம்பும் ரஜினிகாந்த்..

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் இமயமலை பயணத்தை தொடங்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

 
சமீபத்தில் தூத்துக்குடி சென்ற ரஜினியை ஒருவர் ‘நீங்கள் யார்?’ என கேட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல், எதற்கெடுத்தாலும் மக்கள் போராட்டம் நடத்தினால் நாடு சுடுகாடு ஆகிவிடும் என அவர் தெரிவித்த கருத்தும் கடும் சர்ச்சைகளுக்கும், எதிர்ப்புக்கும் ஆளானது.
 
இந்த பரபரப்பான சூழ்நிலையில் அவர் இமயமலைக்கு செல்ல இருக்கிறார். ரஜினிகாந்த் திரைப்படங்களில் நடித்து முடித்து ஓய்வு கிடைக்கும் போது அவ்வப்போது இமயமலைக்கு செல்வது வழக்கம். ஆனால், இந்த முறை செல்வது வழக்கமான பயணம் அல்ல. 
 
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் அவர் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். அதற்கான நடிகை, நடிகர் தேர்வுகள் ஏற்கனவே முடிந்து விட்டதாக தெரிகிறது. தற்போது படபிடிப்பும் தொடங்கவுள்ளது. ரஜினிக்கு மிகவும் பிடித்த இமயமலை பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. அதற்காகத்தான் வருகிற 5ம் தேதி ரஜினி இமயமலை செல்ல இருக்கிறார். அங்கு ஒரு மாதம் தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்து கொள்வார் எனத் தெரிகிறது.